இலங்கையின் ஓரினச் சேர்க்கையாளர்களிடையே எய்ட்ஸ் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி, தொற்று நோய்கள் மற்றும் எய்ட்ஸ் பரவுகையைக் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் இயக்குனர் டொக்டர் சிசிர லியனகே கூறியுள்ளதாவது:

“சந்தேகத்துக்குரிய 12 ஆயிரம் பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 280 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியிருப்பது உறுதியாகியிருக்கிறது. அவர்களுள் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கையாளர்கள். இவர்கள் கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை மற்றும் குருணாகலையைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“மேலும் மேற்படி பகுதிகளில் எய்ட்ஸ் உட்பட தொற்று நோய்களின் பரவுகை அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முழு முனைப்புடன் ஆரம்பித்துள்ளோம்.”