பாகிஸ்தானில் இருந்து இன்று 40 ஆயிரம் மெற்றிக் டொன் உரம்  கொண்டு வரப்படும் எனவும், அவை உடனடியாகவே விவசாயப்பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இதனை இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

குறித்த உரம் சுமார் 200 பாரவூர்திகளின் மூலம் விவசாயப்பிரதேசங்களுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை வழங்குமாறு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உர ஏற்றுமதிக்கு பாகிஸ்தானில் கட்டுப்பாடுகள் இருக்கும்நிலையில், அந்த நாட்டு பிரதமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை அடுத்து இன்று உரம் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளது.