7 பேரை தாக்கிய சிறுத்தையை பிடிப்பதற்கு தொடர் வேட்டை!!!

Published By: Digital Desk 7

03 Jan, 2018 | 12:43 PM
image

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் பன்மூர் பிரிவில் நேற்று பகல் 7 பேரை காயப்படுத்திய சிறுத்தையினை பிடிப்பதற்கு ஹட்டன் பொலிஸாரும், வனஜீவி அதிகாரிகளும் தொடர் சுற்றி வளைப்பினை மேற்கொள்வதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரி ஏ.ஆர்.பி.ஏ கருணாதிலக்க தெரிவித்தார்.

நேற்று தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் பொழுது பெண் ஒருவரை தாக்கியுள்ளது. அப்பெண் கூச்சலிட அவ்விடத்திற்கு வந்த நான்கு ஆண்களையும் தாக்கியதில் அவர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து சிறுத்தையை சுற்றிவளைப்பதற்கு சென்ற இரண்டு ஆண்களும் சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்த 7 பேரில் ஒருவர் மாத்திரம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் 6 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக வனவிலங்கு அதிகாரி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"சிறுத்தைகள் இன்று, நேற்று உடனடியாக வந்தவைகள் அல்ல. அவை பல வருடங்களாக இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றது.

அண்மைக்காலமாக தோட்ட குடியிருப்புகளுக்கு அருகாமையில் காடுகள் காணப்படுவதனால் சிறுத்தைகள் தமது வாழ்விடங்களை இப்பிரதேசங்களுக்கு மாற்றியுள்ளதுடன், அவைகளுக்கு உணவாக கால்நடைகள் காணப்படுவதனால் அவைகள் குடியிருப்புகளுக்கு வருகை தருகின்றன.

எனவே குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள காடுகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்" என அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது குறித்து தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக சிறுத்தைகள் தமது வாழ்விடங்களுக்கு அடிக்கடி வருகை தருவதாகவும், பல தொழிலாளர்கள் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளதாவும், தோட்ட நிர்வாகமும், அரசாங்கமும் இது குறித்து எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை என்றும் இதனால் வாழ்வாதார தொழிலை செய்ய முடியாதுள்ளதாகவும், கால்நடைகளை வளர்க்க முடியாதுள்ளதாகவும், இது குறித்து உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் குதிக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44