பிணை முறி அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.

சர்சைக்குரிய பிணை முறி குறித்த விசாரணைகளை உள்ளடக்கிய ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

1400 பக்கங்களை கொண்ட குறித்த அறிக்கையில் 70 பேரின் சாட்சியங்களும், சர்சைக்குரிய பிணை முறி தொடர்பில் எடுக்க வேண்டிய பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

இது தொடர்பில் தனதி உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை இடம்பெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள், அரச வளங்கள், அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் என்பனவற்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையானது, ஆணைக்குழுவின் தலைவரான மேல்நீதிமன்ற நீதியரசர் பத்மன் சூரசேனவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதியினால் குறித்த ஆணைக்குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.