அமெரிக்கா- நியூயோர்க், பிரான்க்சு பகுதியிலுள்ள 4 மாடிகளைக் கொண்ட குடியிருப்பொன்றில் நேற்று காலை திடீரென பரவிய தீ காரணமாக 7 குழந்தைகள் உட்பட 23 பேர் எரிகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், காயமடைந்தவர்களில் தீயணைப்புப் படை வீரர்களும் அடங்குவதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திடீரென பரவிய தீக்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில் அந் நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.