பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதற்கு தாமதமானால் அவர்களது பெற்றோருக்கு தண்டப் பணம் விதிக்கும்   புதிய நடைமுறையொன்றை அமுல்படுத்த பிரித்தானிய பிராந்தியமொன்றின்  பாடசாலை சபை  நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பிரகாரம் ஸ்ராபோர்ட்ஷியர் பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள்  தமது பாடசாலையிலான ஒரு தவணையின் போது 10  தடவைகளுக்கு மேல் காலதாமதமாகி  வரும்  பட்சத்தில் அவர்களது பெற்றோர்  நீதிமன்றத்தில் ஆஜராகி 120  ஸ்ரேலிங் பவுண் தண்டப் பணத்தை செலுத்த  நேரிடும்.

ஸ்ராபோர்ட்ஷியரிலுள்ள  பாடசாலைகளில் மாணவர்கள்  உரிய  நேரத்துக்கு சமுகமளிக்காமை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் 20   தடவைகள் பாடசாலைக்கு தாமதமாகி வரும் பிள்ளைகள் தொடர்பில் அனுப்பப்பட்டு வந்த எச்சரிக்கை அறிவித்தலால் உரிய பலன் கிடைக்காததையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.