மந்தகதியில் பொரு­ளா­தாரம்..?

Published By: Robert

03 Jan, 2018 | 09:48 AM
image

புதிய வருடம் பிறந்­துள்ள நிலையில் கடந்த வரு­டத்தில் பொரு­ளா­தார நிலை­மைகள் எவ்­வாறு அமைந்திருந்தன  என்­பது  தொடர்பில் ஆராய்ந்து பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. குறிப்­பாக கடந்த 2017  ஆம் ஆண்டில் நாட்டின்  பொரு­ளாதார­ இயற்கை அனர்த்தம் மற்றும்செயற்கை   கார­ணி­க­ளினால்  பாரிய பாதிப்­புக்­களை சந்­தித்­தது. கடந்த மூன்று வரு­டங்­க­ளாக    நாட்டின் பொரு­ளா­தாரம் எதிர்­கொண்­டு­வரும் தாக்­கங்கள் இன்னும்  குறை­வ­டை­யாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. 

குறிப்­பாக கடந்த  2017 ஆம் ஆண்டில்  இயற்கை அனர்த்­தங்கள்  அதி­க­ளவில்  இடம்­பெற்­றன.  இதனால் பொரு­ளா­தாரம்  பாரிய   தாக்­கங்­களை எதிர்­கொண்­ட­துடன்     பொரு­ளா­தார வளர்ச்­சியில் நெருக்­க­டியும் ஏற்­பட்­டது.  

குறிப்­பாக 2017 ஆம் ஆண்டின் முழு­மை­யான பொரு­ளா­தார  செயற்­பா­டுகள்  தொடர்பில் தற்­போது உட­ன­டி­யாக  எத­னையும் கூற முடி­யாது. ஆனால் கடந்த 2017  ஆம் ஆண்டின்   முதல் ஒன்­பது   மாதங்­களில்   நாட்டின் பொரு­ளா­தாரம் எந்த  நிலையில் இருந்­தது என்­பது குறித்து   ஆரா­யலாம்.   மேலும்  கடந்த வரு­டத்தின்   மூன்றாம் காலாண்டின்  பொரு­ளா­தார வளர்ச்­சி­யா­னது 3.3 வீத­மாக பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.   கடந்த வரு­டத்தின் மூன்றாம் காலாண்டில்   விவ­சாயத் துறை  7.6 வீத பங்­க­ளிப்­பையும் கைத்­தொழில் துறை  27.8 வீத  பங்­க­ளிப்­பையும் சேவைகள் துறை 56.3 வீத பங்­க­ளிப்­பையும் உற்­பத்தி பொருட்கள் துறை 8.3 வீத பங்­க­ளிப்­பையும் செலுத்­தி­யுள்­ளன. 

அத்­துடன்  மூன்றாம் காலாண்டில் இறப் பர் மற்றும்   தேயிலை உற்­பத்தி   அதிக­ ரித்து காணப்­ப­டு­கின்­றது.   சேவைத்­து­றை­யா­னது  4.3 வீதத்­தினால் மூன்றாம் காலாண்டில் அதி­க­ரித்­துள்­ளதை காண முடி­கின்­றது.   அந்­த­வ­கையில் 2017 ஆம்  ஆண்டின்   மூன்றாம் காலாண்டின்    மதிப்­பீ­டு­களின் பிர­கா­ரமும்  முதல் ஒன்­பது  மாத  மதிப்­பீ­டு­களின்    2017 ஆம் ஆண்டு எவ்­வா­றான  பொரு­ளா­தார வளர்ச்­சியை  பெற்­றுள்­ளது என்­ப­தனை  எம்மால் ஊகிக்க முடி­கின்­றது. 

இந்­நி­லையில்  2017 ஆம் ஆண்டின் பொரு­ளா­தார  நிலைமை  குறித்து  மத்­திய வங்கி ஆளுநர்  இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி   இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.  அதா­வது  உத்­தே­சிக்­கப்­பட்ட அபி­வி­ருத்­தியை விட பின்­ன­டை­வான பொரு­ளா­தார வளர்ச்­சியே 2017  ஆம் ஆண்டின் மூன்­றா­வது காலாண்டில் பதி­வா­கி­யுள்­ளது. எனினும் அடுத்த ஆண்டில் நிலை­யான பொரு­ளா­தார அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடைய முடியும்  என்று   மத்­திய வங்­கியின் ஆளுநர் குறிப்­பிட்­டுள்ளார். 

அத்­துடன் மூன்றாம் காலாண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்­சி­யா­னது பிர­தா­ன­மாக கைத்­தொழில் மற்றும் சேவைகள் துறை யின் மித­மான விரி­வாக்­கத்­தினால் உந்­தப்­பட்­டுள்ள நிலையில் கால­நிலை தொடர்­பான குழப்­ப­நி­லை­க­ளுக்கு வகை­கூறும் வகையில் வேளாண்மை துறை­யா­னது எதிர்­ம­றை­யான வளர்ச்­சி­யொன்றை தொடர்ந் தும் பதி­வு­செய்­துள்­ளது.

குறு­கிய வளர்ச்சி வாய்ப்­புக்கள் தொடர்ந் தும் மித­மாகக் காணப்­ப­டினும் வெளி­நாட்டு நேரடி முத­லீட்­டினால் ஏற்­று­மதி மற்றும் முத­லீட்டின் தொடர்ச்­சி­யான முன்­னேற்­றத்­தினால்  2018 ஆம் ஆண்டில் தேசிய பொரு­ளா­தா­ர­மா­னது ஒரு ஸ்திர­மான முன்­னேற்ற நிலையை அடையும். 

சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் விரி­வாக்­கப்­பட்ட நிதி­யியல் வச­திகள் நிகழ்ச்சித் திட்­டத்தின் நான்­கா­வது தொகுதி இந்த மாதம்   கிடைக்­கப்­பெற்­ற­மையும் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் முத­லீட்டு மீள்­பெ­றுகை தொடர்ச்­சி­யான உட்­பாய்ச்­சல்கள் போன்­றவை சென்­மதி நிலு­வை­யினை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்கு துணை புரிந்­தன என்றும்   மத்­திய வங்­கியின் ஆளுநர் கூறி­யுள்ளார். 

அந்­த­வ­கையில்  மத்­திய  வங்கி ஆளு­நரின் கூற்­றின்­படி   2017ஆம் ஆண்டில் குறை­வான பொரு­ளா­தார வளர்ச்­சியை அடைந்­தி­ருந்­தாலும்  இவ்­வ­ரு­டத்தில் அதனை   மீள­மைக்க முடியும் என்ற நம்­பிக்­கையை  வெ ளியிட்­டி­ருக்­கின்றார். 

கடந்த 2016 ஆம் வரு­டத்தை பொறுத்­த­வரை நாட்டின்  வறுமை நிலை­யா­னது  4.1 வீத­மாக பதி­வா­கி­யுள்­ளது. 2017 ஆம் ஆண்டை பொறுத்­த­வரை   வறுமை நிலை­யா­னது  4.5 வீத­மாக  காணப்­பட்­டது.  

அதன்­படி பார்க்­கும்­போது நாட்டின் பொது­வான  வறுமை நிலை­யா­னது    படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்து செல்­வதை காண முடி­கின்­றது. 

குறிப்­பாக  முல்­லைத்­தீவு,  கிளி­நொச்சி மாவட்­டங்­களில்  வறுமை நிலையும் குறை­வ­டைந்­துள்­ள­தாக காட்­டப்­பட்­டுள்­ளது.    கிளி­நொச்சி மாவட்­டத்தின் வறுமை நிலை யானது 18.2 வீத­மாக பதி­வா­கி­யுள்­ளது. அத்­துடன்  முல்­லைத்­தீவு  மாவட்­டத்தின் வறுமை நிலை­யா­னது 12.7வீத­மாக பதி­வா­கி­யுள்­ளது. 

கடந்த சில வரு­டங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில்   இவற்றில் வீழ்ச்­சியை காண்­கின்றோம். அதே­போன்று  வேலை­யின்மை வீத­மா­னது 4.1 வீத­மாக அமைந்­துள்­ளது.   கடந்த சில வரு­டங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில்    வேலை­யின்மை வீத­மா­னது   தொடர்ந்து     இதே நிலையில் இருக்­கின்­ற­மையை  காண முடி­கின்­றது. 

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் கடந்த வரு­டத்தின்  பொரு­ளா­தார நிலை­யா­னது     மகிழ்ச்­சி­ய­டைக்­கூ­டிய வகையில் இல்­லை­யா­யினும் மேலும்  முன்­னேற்­ற­ம­டை­யலாம் என்ற நிலையை எடுத்­துக்­காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.  இது தொடர்பில்   சர்­வ­தேச  ஊடக நிறு­வனம் ஒன்றின்   பொரு­ளா­தார   ஊட­க­வி­ய­லாளர்   சிஹார் ஹனீஷ்  கருத்துப் பகிர்­கையில் கடந்த  2017 ஆம் ஆண்டை பொறுத்­த­வரை  கடி­ன­மான வரு­ட­மாக அமைந்­துள்­ளது என்று கூறலாம்.   குறிப்­பாக   கடந்த வரு­டத்தில் இயற்கை அனர்த்­தங்கள் அதிகம்   இடம்­பெற்­றன. மழை வெள்ளம் மற்றும் வரட்சி ஆகிய  இரண்டு வகை­யான  அனர்த்­தங்­களும்  கடந்த வரு­டத்தில் இலங்­கைக்கு ஏற்­பட்­டன.  

இதனால்   பொரு­ளா­தாரம் பாதிக்­கப்­பட்­ட­துடன்  உற்­பத்தியும்   பாதிக்­கப்­பட்­டது.   உற்­பத்தி பொரு­ளா­தாரம்  பாதிக்­கப்­பட்­டதால்   அதிகம் இறக்­கு­மதி செய்­ய­வேண்­டிய  நிலைமை ஏற்­பட்­டது.     

அதே­போன்று      அர­சாங்­கத்தின்  நிதிக் கொள்கை மற்றும் வரிக்  கொள்கை என்­ப­னவும்  இறுக்­க­ம­டைந்­ததால்      பொரு­ளா­தாரம் பாதிக்­கப்­பட்­டது.   அதா­வது வட்டி வீதம் அதி­க­ரிக்­கப்­பட்­டதால் மக்­களின் கடன் பெறும் அளவு குறை­வ­டைந்­தது. அத­னாலும்  பொரு­ளா­தார வளர்ச்சி வீதத்தில்   தாக்கம்  ஏற்­பட்­டது. அத்­துடன்  வரிக் கொள்­கையும் கடந்த வரு­டத்தைப் பொறுத்­த­வரை முழு­மை­யாக மகிழ்ச்­சி­ய­டைய முடி­யாது.

ஆனால்   எதிர்­வரும் வரு­டங்­களில்  முழுமையாக    பொருளாதார வளர்ச்சியை  அடை யும் நோக்கில்    சிறந்த அடித்தளம் போடப்பட்டுள்ளது என்பதனை குறிப்பிடலாம் என்றார். 

எது எப்படியிருப்பினும் அரசாங்கம்  தொடர்ந்து  தொழில்வாய்ப்புக்களை   அதிகரிப்பது  தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும். 

அத்துடன்  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களுக்கான பொருளாதார  வாய்ப்புக்களை கட்டியெழுப்புவது குறித்து   அவதானம் செலுத்த வேண்டும்.   கடந்த வருடத்தை  பொறுத்த வரை   பொருளாதாரதம்   சாதாரணமாக பயணித்துள்ளது. எதிர்வரும் வருடங்களில்   பொருளாதாரத்தை சிறப்பாக கொண்டு செல்ல  நடவடிக் கைகள் எடுக்கப்படவேண்டும்.  அது குறித்து கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கவேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58