பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் சபீர் ரஹ்­மா­னுக்கு கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தி­லி­ருந்து 6 மாதம் தடை விதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த வருடம் ஜூன் மாதம் வரை அவர் எந்த பங்­க­ளாதேஷ் போட்­டி­க­ளிலும் விளை­யாட முடி­யாது.

மேலும் அவ­ருக்கு அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த 6 மாதத்­திற்குள் அவர் 1 கோடி ரூபா பணம் கொடுக்க வேண் டும் என்று பங்­க­ளாதேஷ் கிரிக் கெட் சபை குறிப்­பிட்­டி­ருக்­கி­றது.

சபீர் ரஹ்மான் தனது சொந்த ஊரான 'ராஜ்­சேஹி' தேசிய அணிக்­கா­கவும் விளை­யாடி இருக்­கிறார்.

ஏற்­க­னவே இவர் ஒரு முறை களத்தில் இருக்கும் போது நடு­வ­ரிடம் சண்­டை­யிட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டார். 

ஆனால் அப்­போது மன்­னித்து விடப்­பட்டார். அதற்கு பின் மீண்டும் ஐ.சி.சி. போட்டி ஒன்றில் மீண்டும் நடு­வ­ரிடம் சண்­டை­யிட்­டி­ருக்­கிறார். ஆனால் அப்­போதும் அவ­ருக்கு சிறிய அப­ராதம் மட்­டுமே விதிக்­கப்­பட்­டது.

இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த தேசிய போட்டி ஒன்றில் மீண்டும் இதே தவறை அவர் செய்­தி­ருக்­கிறார். ஆனால் இந்த முறை அவர் நடு­வ­ரிடம் மட்டும் தவ­றாக நடந்து கொள்­ளாமல் அங்கு இருந்த ரசிகர் ஒரு­வ­ரி­டமும் சண்­டை­யிட்­டி­ருக்­கிறார். மேலும் களத்தில் நடு­வரை மோச­மாக திட்டி இருக்­கிறார்.

இவரின் இந்த செயலை பார்த்த பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை அணி­யி­லி­ருந்து அவரை நீக்கி இருக்­கி­றது. மேலும் 6 மாதம் கிரிக்கெட் விளை­யாட தடை விதித்­துள்­ளது. அப­ரா­தமும் விதித்­துள்­ளது. இந்த அப­ராத தொகையை தண்­டனை காலம் முடி­வ­டை­வ­தற்குள் கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. 

சபீர் அதே இடத்தில் மன்னிப்பு கேட்டு அழுத சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.