சீன செய்­ம­தி­யொன்று கட்­டுப்­பாட்டை இழந்து எதிர்­வரும் மார்ச் மாதம் பூமியின் மீது மோதக்­கூ­டிய வாய்ப்­புள்­ள­தா­கவும் இதன்­போது அதி­லுள்ள அதி நச்­சுத்­தன்மை வாய்ந்த கூறுகள் பூமியை வந்­த­டை­யும்­ அ­பாயம் உள்­ள­தா­கவும்  விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

அந்த செய்மதியிலுள்ள  ஏவு­கணை எரி­பொ­ரு­ளாகப் பயன்­ப­டுத்­தப்­படும் ஹைட்­ராஸின் என்ற இர­சா­ய­னமே இவ்­வாறு பூமியை வந்­த­டையும் அபாயம் உள்­ள­தாக  எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த இர­சா­ய­ன­மா­னது மனி­தர்­களில் புற்­று­நோயை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய அபாயம் மிக்­க­தா

கும். இந்­நி­லையில் மேற்­படி நச்சு இர­சா­ய­னத்தைக் கொண்­டுள்ள திய­னங்கோங் -– 1 என்ற மேற்­ப­டி­ செய்­மதி செய­லி­ழந்து பூமியை நோக்கி வேக­மாகச் சுழன்று வந்து எதிர்­வரும் மார்ச் மாதம் பூமியின் மீது மோத­வுள்­ள­தா­க விஞ்­ஞா­னி கள் கூறு­கின்­றனர்.

இந்த செய்­மதி ஸ்பெயின்,  இத்­தாலி,  துருக்கி,  இந்­தியா மற்றும் அமெ­ரிக்­காவின் பாகங்­களில் விழக்­கூ­டிய வாய்ப்­புள்­ள­தாகத் தெரி­விக்கும் விஞ்­ஞா­னிகள் அந்த செய்­மதி விழக்­கூ­டிய வல­யங்­களை  வர்­ணத்தில் குறிப்­பிட்டு  காட்டும் உலக வரை­ப­ட­மொன்றை வெளி­யிட்­டுள்­ளனர். அந்த வரை­ப­டத்தில் மேற்­படி செய்­ம­தியால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நாடு­களில் இலங்­கையும் உள்­ள­டங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்த செய்மதி விண்வெளிக்கு ஏவப்­பட்டு சீனாவின் மிகப் பெரிய விண்வெளி நிலை­ய­மாக செயற்­பட்டு வந்­தது. அந்த செய்­மதி இந்த ஜன­வரி மாதத்­துக்கும் எதிர்­வரும் மாதத்­துக்­கு­மி­டையில்  செயலிழக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தற்போது அந்த செய்மதி பூமியிலிருந்து 300  கிலோமீற்றர் தூரத்தில் வலம் வந்து கொண்டி ருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.