கொழும்பு மாந­கர சபைத் தேர்­தலை நடத்த இடைக்­கால தடை விதிக்­கு­மாறு கோரி, உயர்­நீ­தி­மன்­றத்தில் மனுத்­ தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. 

கொழும்பு மாந­கர சபைத் தேர்­த­லுக்­காக தாம் தாக்கல் செய்த வேட்பு மனுப் பட்­டியல் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக, தேசிய மக்கள் கட்சி இந்த மனுவை தாக்கல் செய்­துள்­ளது. 

அக் கட்­சியின் செய­லாளர், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஸ்ரீநாத் பெரேரா உள்­ளிட்ட மூவர் இதனை தாக்கல் செய்­துள்­ளனர்.  மேலும், இந்த மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய உள்­ளிட்ட குழு­வினர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். 

அத்­துடன், தமது வேட்பு மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டமை சட்­ட­வி­ரோ­த­மா­னது என கூறி­யுள்ள மனு­தா­ரர்கள், குறித்த வேட்பு மனுவை மீள பொறுப்­பேற்­கு­மாறு சம்­பந்­தப்பட்­ட­வர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டு­மாறும் நீதி­மன்­றத்­திடம் கோரி­யுள்­ளனர். மேலும் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்­கப்­படும் வரை, கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறும் அவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.