தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்­பாணத்தில் உள்ள இளங்­க­லைஞர் மண்ட­பத்தில்  வெளியி­டப்­ப­ட­வுள்ளது.

ஆனந்­த­சங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன், ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி (ஈ.பி­.ஆர்­.எல்.எப்.), ஜன­நா­யக தமி­ழ­ர­சுக் ­கட்சி, ஈரோஸ் அமைப்பின் அர­சியல் பிரி­வாக இயங்­கிய ஈழவர் ஜன­நா­யக முன்­னணி உரு­வாக்­கி­யுள்ள  தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பு உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றன.  தற்­கால உத்­தி­யோக பூர்­வ­மான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் இரு­த­ரப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் கைச்­சாத்­தி­யா­கி­யுள்ள நிலை­யி­லேயே தற்­போ­து தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளியி­டப்­ப­டு­கின்­றது. குறித்த தேர்தல் விஞ்­ஞா­பன வெளியீடு செய்யும் நிகழ்வில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யின செய­லாளர் ஆனந்­த­சங்­கரி, ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவர் சுரேஷ் பி­ரே­மச்­சந்­திரன், செய­லாளர் சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி., ஜன­ந­யாக தமி­ழ­ர­சுக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளான பேரா­சி­ரியர் சிற்றம்­பலம், சிவ­கரன், மற்றும் ஈரோஸ் அமைப்பின் முக்­கி­யஸ்­தர்கள் மற்றும் அக்­கூட்­ட­மைப் பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான  வேட்பாளார்கள் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்னமை குறிப்பிடத்தக்கது.