கொழும்பு மாநகர சபைத் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி தேசிய மக்கள் கட்சி மீயுயர் நீதிமன்றில் இன்று (2) மனுத் தாக்கல் செய்துள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்கட்சி சார்பில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும் அவ்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையிலேயே தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி அக்கட்சி நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

மேலும் தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்துச் செய்யுமாறும் அவ்விண்ணப்பத்தில் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த மனுவை, அக்கட்சியின் தலைவர் இந்திக்க சஞ்சீவ, நல்லதம்பி யோகேஷ்வரன் மற்றும் ஐ.தே.க. மாகாண சபை அமைச்சர் ஸ்ரீநாத் பெரேரா ஆகியோரே தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட பதினான்கு பேர் இம்மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.