இறுதிச் சடங்கிற்கு காசோலை எழுதி வைத்து விட்டு, வயோதிப தம்பதியினர் தற்கொலை!!!

Published By: Digital Desk 7

02 Jan, 2018 | 04:37 PM
image

தமிழ்நாடு- சென்னை, போரூரில் குடும்பப் பிரச்சனையில் தங்களால் யாருக்கும் தொல்லை இருக்கக்கூடாது என்பதற்காக தங்களது இறுதிச் சடங்குக்காக தலா ரூ. 2 லட்சம் பணத்தை வைத்துவிட்டு வயோதிப தம்பதியினர்  தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்கள் சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் புஷ்பா நகரைச் சேர்ந்த 62 வயதான  ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் மற்றும் அவரது  56 வயதான மனைவி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்.மகன் போரூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்

இந்நிலையில் மகன்  நேற்று புது வருட பிறப்பிற்காக பழனிக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த தம்பதியினர் நேற்றிரவு  தங்கள் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளனர்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்று முடியாமல் போகவே தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து,  உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டை சோதனையிட்ட போது  தற்கொலை செய்து கொண்ட கணவன்- மனைவி இருவரும் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.

அக் கடிதத்தில்,

" எங்களின் இறுதிச் சடங்கிற்காக காசோலை வைத்துள்ளோம். நாங்கள் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை எங்கள் மரணத்திற்கு பின்னர் எங்களை எரித்து விடுங்கள். எங்களது இறுதிச் சடங்கிற்கான செலவுக்காக தலா 2 லட்சம் ரூபா காசோலை வைத்துள்ளோம். அதை பயன்படுத்திக்கொள்ளவும்." என்று எழுதியுள்ளனர்.

கடிதத்துடன் 2 லட்சத்துக்கான இரண்டு காசோலையும், உறவினர்களின் தொலைப்பேசி இலக்கமும் இருந்துள்ளது.   

உயிரிழந்த தம்பதியினரின்  உடலைய பிரேத பரிசோதனைக்காக  அரசு பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் பெற்றோர் இறப்பு குறித்து மகனுக்கும், மகளுக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இறுதிச் சடங்கிற்காக பணத்தை வைத்து கொண்டு கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டதால் குடும்பப் பிரச்சினையா என்ற அடிப்படையில் பொலிஸார் தங்களது ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52