(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதனை உறுதிசெய்யவுள்ளது. அவ்விலக்கை அடைந்துகொள்வதற்காக அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தல் காலத்தில் ஊடகங்கள் பின்பற்றிச் செயற்படுவதற்கென தீர்மானிக்கப்பட்டுள்ள ஊடக செல்நெறி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்றத்தின் அனுமதியைக்கோரும் ஆவணத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒப்பமிடும் நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.