பிரித்தானியாவின் சில பகுதிகளில் எலினர்  சூறாவளி தாக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.

வட இங்கிலாந்து, தென் ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை பிரித்தானியாவின் மேற்குக் கரையோரத்தில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுகின்றது.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக் காரணமாக மேற்குக் கரையோரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் பிரித்தானியாவின் சுற்றுச்சூழல்துறை முகவரகம் எச்சரித்துள்ளது.