தகராறு ஒன்றையடுத்து நேற்று மாலை தாக்குதலுக்கு இலக்கான நான்கு குழந்தைகளின் தந்தை, இன்று (2) காலை உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாவெவ - கல் அமுன பகுதியைச் சேர்ந்த 56 வயது நிறைந்த இந்த நபர், நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள பிரதான வீதி வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தடியால் அவரை பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் கடுமையான உட்காயங்களுக்கு உள்ளான அவர் வீடு திரும்பியதுடன் நடந்தவற்றை வீட்டாரிடம் கூறியுள்ளார்.

பின்னர், தூக்கம் வருவதாகக் கூறி பாயை விரித்துப் படுத்த அவர், இரவு உணவையும் உட்கொள்ளவில்லை.

தேநீர் கொடுப்பதற்காக இன்று காலை அவரை எழுப்பியபோதே அவர் மரணித்துவிட்டதை குடும்பத்தினர் அறிந்தனர்.

இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.