பௌத்த சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் நாட்காட்டிகளை அச்சடித்திருந்த இறைச்சிக் கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுவருட காலமான கடந்த சில தினங்களில், பௌத்த சமயத்தை அகௌரவப்படுத்தும் வகையில் நாட்காட்டிகள் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருவதாக பௌத்த சமய அலுவல்கள் அமைச்சிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஹபரணை பிரதேசத்தில் இறைச்சிக் கடையொன்றில் அச்சிடப்பட்டிருந்த நாட்காட்டியில், புத்தர் உணவு உண்பது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார், குறித்த இறைச்சிக் கடை உரிமையாளரைக் கைது செய்ததுடன், அவர் வசமிருந்த இதுபோன்ற 55 நாட்காட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று புத்தரை அகௌரவப்படுத்தும் விதமாகச் சித்திரிக்கப்பட்ட நாட்காட்டிகளை அச்சிட்டு வினியோகித்த மேலும் மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.