பிரேஸிலின் மத்திய மாகாணமான கோயாஸிலுள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் 9 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைக்கூண்டொன்றிலிருந்த கைதிகள் மூவரை ஆயுதமேந்திய குழுவினர் தாக்க முற்பட்டபோதே கலவரம் வெடித்துள்ளது. இக்  கலவரத்தைத்  தொடர்ந்து, கைதிகள் பலர் தப்பிச்சென்றுள்ளனர்.

தப்பிச்சென்றவர்களில் 27 பேரை பிடித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தற்போது சிறைச்சாலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.