இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்த பின் வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 30ஆம் திகதிவரை அனுப்பமுடியும்.

2015ஆம் ஆண்டில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வெட்டுப் புள்ளிக்கு மேல்பெற்றோர் 2014ஆம் ஆண்டின் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி பெற்றோர் மேற்படி புலமைப்பரிசில்களுக்காக விண்ணப்பிக்கலாம்.

ஏப்ரல் 30ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் காரியாலயத்திற்கு அனுப்பிவைக்கலாம். மேலதிக தகவல்களை பணியகத்தின் இணைத்தளம் ஊடாகவும், வாராந்த புதினப்பத்திரிகைகள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.