இந்தியாவின்  கேரளா மாநிலத்திற்கு 25 கோடி ரூபா மதிப்புள்ள போதை பொருளை கடத்தி வந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்னை மத்திய மத்திய போதை தடுப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கேரள மாநிலம் கொச்சி நெடும்பாஞ்சேரியில் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய ஒரு பெண்ணின் நடவடிக்கை மீது சந்தேகப்பட்டு விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய போதை தடுப்பு அதிகாரிகள்   அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து அவர் வைத்திருந்த பயணப் பொதியை சோதனை செய்தபோது அதில் 4ž கிலோ கொக்கைன் போதை பொருட்கள் இருந்துள்ளது.

4ž கிலோ கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்பெண்ணிடம் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

விசாரணையில்  குறித்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 36 வயதான டிகாய் ஜோநாடி சைன் என்பதும் ஒரு கிலோ கொக்கைனுக்கு 3 லட்சம் ரூபா  கமி‌ஷன் என்ற அடிப்படையில் கொக்கைனை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.