நைஜீரியாவில் தேவாலயத்தில் புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்று திரும்பியவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க பகுதியான ரிவர்ஸ் ஸ்டேட் பகுதியிலுள்ள ஒமாகு நகரில் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நள்ளிரவு 12.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திடீரென பிராத்தனை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

இத் திடீர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்துள்ளோர்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.