நாட்டின் இன்றைய காலநிலை நிலைவரங்களின் அடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அற்ற காலநிலை நிலவுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா ,தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலுன் சில பிரதேசங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக அந்நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, மேற்கு ,சப்ரகமுவ ,மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலைவேளைகளில் பனிமூட்டத்துடன் காணப்படும்.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். 

இடிமின்னலின்போது பொதுமக்கள் மகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.