நிலாவெளியில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது கடற்கரையோர, சேவைகளுடனான சொகுசான ஓய்வுகால தொடர்மனைத்தொடரான Oceanfront Condos, அவற்றின் உரிமையாளர்களிடம் சாவிகளை அண்மைகளை கையளித்திருந்தது.

இந்தத்திட்டத்தின் முதல் தொகுதி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டிருந்ததுடன் இரண்டாம் கட்டம் 2018 மார்ச் மாதமளவில் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டர்நஷனல் கொன்ஸ்ட்ரக்ஷன் கொன்சோர்டியம் (ICC) தலைவரான ஹர்ஷா டி சேரமின் சிந்தனை வெளிப்பாடாக இந்த திட்டம் அமைந்துள்ளது. 

நிலாவெளி கடற்கரை சூழ அமைந்துள்ள இந்த தொடர்மனைரூபவ் தங்குமிட விடுதிகளுக்கு மாறாக சொகுசான அனுபவத்தை வழங்குவதுடன் மக்களுக்கு வாழ்நாள் முழுவதுக்குமான முதலீட்டு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

இலங்கையில் முதல் தடவையாக நாம் கடற்கரையை முகப்பாகக்கொண்ட தொடர்மனையை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை நாம் வழங்கியிருந்தோம் இது முதலீடாக செயற்படக்கூடியது என்பதுடன் அவர்களின் விடுமுறையை அனுபவிக்க உகந்த பகுதியாகவும் காணப்படும். கடற்கரையை முகப்பாகக்கொண்ட தொடர்மனையின் முதல் கட்ட உரிமையாளர்களுக்களின் இல்லங்களுக்கான சாவிகள் வழங்கப்பட்டிருந்தன.

நிலாவெளி கடற்கரை முகப்பான தொடர்மனைகள், மக்கள் மத்தியில் அதிகளவு பிரபல்யம் பெற்றுவருகின்றன. உயர் மீள் விற்பனை பெறுமதியை கொண்ட விடுமுறை இல்லங்களை வாடகைக்கு அமர்த்தக்கூடிய வசதியும் காணப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் சார்பாக இந்த தொடர்மனைகளை நிர்வகிப்பது மற்றும் வாடகைக்கு அமர்த்துவது போன்ற செயற்பாடுகளை வாடிக்கையாளர் சார்பாக முன்னெடுக்க ICC முன்வந்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களின் முதலீடுகள் பெறுமதி அதிகரித்துச்செல்வது மட்டுமின்றி, வருமானத்தை பெற்றுத்தரக்கூடியதாகவும் அமைந்திருக்கும்.

நிலாவெளி Oceanfront Condos தற்போது ஒன்லைன் பதிவு தளங்களிலும் நேரடி மற்றும் பயண முகவர்களினாலும் பதிவு செய்யக்கூடியது. அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாகவும் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

சேவைகளைக்கொண்ட பிரத்தியேகமான தொடர்மனைகளில் நபருக்கு சொந்தமாக்கிக்கொள்ளக்கூடிய ஒரு சொர்க்கபுரியாக திகழ்கிறது. அதிகளவு இடவசதியை கொண்டதுடன் (1180sqft- 2100sqft) விருந்தினர்களுக்கு சமையலறையில் உணவுகளை தயாரித்துக்கொள்ளக்கூடிய வசதியும் காணப்படுகின்றன. நீண்ட கால தங்குமிட வசதிகளையும் வழங்குகிறது. இதில் கடலுணவுகளை வழங்கும் உணவகம் ஜிம், நீச்சல் தடாகம் போன்ற வசதிகளும் காணப்படுகின்றன.

நிலாவெளி செயற்திட்டத்தின் வெற்றிகரமான பூர்த்தி மற்றும் அதிகளவு கேள்வி காரணமாக, தனது அடுத்த திட்டத்தை நிறுவுவதற்காக காலியை ICC தெரிவு செய்துள்ளது. விரைவில் இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்படும். 35 வருடகால பரந்தளவு அனுபவத்தைக்கொண்ட ICC, நாட்டின் முன்னணி நிர்மாண நிறுவனமாக திகழ்வதுடன் உயர் தரம் மற்றும் உரிய காலத்தில் விநியோகங்களை மேற்கொண்டு வருகிறது.