போதை என்­பது ஒரு­வி­த­மான  சொல்ல முடி­யாத ஒரு  இன்ப உணர்வை அனு­ப­விப்­ப­தாக எண்­ணிக்­கொண்டே போதை  பொருட்­களை  ஒவ்­வொ­ரு­வரும்  பாவிக்­கின்­றார்கள். அந்­த­வ­கையில்    காதல், சிகரெட், மது போலவே   வாசிப்பும்  ஒரு போதைப் பொருள் ஆகும்.   வாசிப்பு என்­பதை ஒரு சுமை­யாக  நினைப்­ப­வர்­க­ளுக்­குக்­கூட  பிடித்­த­மான  ஒரு விச­யத்தை  வாசிக்கத் தொடங்­கினால் பல  பக்கங்கள் பறக்கும் போதும் நேரம் தூக்கம், பசி மறந்து அதில் மயங்­கிக்­கி­டக்கும் அள­வுக்கு  வாசிப்பு ஈர்ப்­பு­டை­யது என்­பதால்  வாசிப்­பையும் நாம் ஒரு போதை என்றே கரு­த­வேண்­டி­யுள்­ளது. 

ஆனால்  வலிமை மிகு  இன்­றைய  தொழில்­நுட்ப சூழலில்  தாக்குப் பிடிக்க முடி­யாமல்  அருகி கொண்டே வரு­வ­வ­துதான் கவ­லைக்­கு­ரி­ய­வி­ட­ய­மாகும்.  வாசிப்­பினால் ஒரு மனிதன் பூர­ண­ம­டை­கிறான்.  வாழ்வின் முன்­னேற்­றத்­திற்கு  வாசிப்பு மிகவும் முக்­கிய பங்கு வகிக்­கின்­றது. 

வாசிப்பு  மூலம்  அதி­க­ள­வான G.B  கொண்ட தக­வல்­களை நமது மூளையில் பதி­வேற்றம் செய்து வைத்துக் கொள்­ளலாம். தேவையின்  போது   அவற்றை  எவ்­வித  இடை­யூ­று­மின்றி  மீள பயன்­ப­டுத்­தலாம்.  மற்ற தொழில்­நுட்ப  சாத­னங்­களில்  இந்த ­வ­சதி  இவ்­வ­ளவு   சிறப்­பாக   செயற்­ப­டு­வ­தில்லை.  நாம் வாசிக்­கின்றோம் என்­ப­தை­விட   எதை வாசிக்­கின்றோம் என்­பதே பிர­தானம்.  துப்­ப­றியும் நாவல், நகைச்­சுவை, து­ணுக்­குகள்  வாசித்து  என்ன பயன். இதை­விட  நம்மில் பலர் சினிமா செய்தி என்ற பக்­கத்­துக்­கா­கவே  பத்­தி­ரிகை வாங்­கு­ப­வர்­களும் உண்டு.  இவை­யின்றி  நாம் சிறந்­த­வற்றை  படித்தே பயன்­பெ­ற­வேண்டும். பகுத்­த­றிவை அறிய  காம­ரா­ஜரை   படிக்க வேண்டும்.  வீரம்  புதுமை, உத்­வேகம்   அடைய  பார­தியை படிக்க வேண்டும். தேச­ப்பற்று,  தன்­னம்­பிக்­கை­கொள்ள சேகு­வே­ராவை படிக்­க­வேண்டும்.  நீ எதை  நினைக்­கி­றாயோ  அது­வா­கவே நீ மாறுகிறாய்.  நீ எதை வாசிக்கிறாயோ அதையே நீ நினைக்கிறாய்.  எனவே வாசிப்பை எல்லோரும்  நேசித்து  வாழ்வில் உயர்வு பெறுவோமாக.