எதைத் திரும்பப் பெற்­றாலும் போன உயி­ரையும் கடந்து போன நேரத்­தையும் ஒரு­போதும் மீளப்­பெற முடி­யாது என்று கூறு­வார்கள்.

 ஆனால் 2018  ஆம் ஆண்டில் நியூ­ஸி­லாந்தின் ஆக்­லான்­டி­லி­ருந்து  புறப்­பட்ட விமா­ன­மொன்று 2017  ஆம் ஆண்டு ஹொன­லுலு விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கி புதுமை படைத்­துள்­ளது.

மேற்­படி ஹவா­யியன் எயார்லைன்ஸ் விமா­ன­மான எச்.ஏ.எல்.  புது வருட தினத்­திற்கு முதல் நாளான  ஞாயிற்­றுக்­கி­ழமை பின்­னி­ரவு 11.55  மணிக்கு புறப்­ப­டு­வ­தாக  ஆரம்­பத்தில் நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் மேற்­படி  விமா­னத்தின் பயணம் சுமார் 10  நிமி­டத்தால் தாம­த­மா­னதால் அந்த விமானம்   புது வருடம் பிறந்து 5  நிமிடம்  கழித்து ஆக்­லான்­டி­லி­ருந்து பய­ணத்தை ஆரம்­பித்து  ஹொன­லுலு  விமான நிலை­யத்தை வந்­த­டைந்­துள்­ளது. 

ஆக்­லான்­டிற்கும் ஹொன­லு­லு­விற்கு இடையில் 23  மணி நேர  இடை­வெளி நில­வு­கின்­றது. இதன் பிர­காரம்  அந்த விமானம் 2017  ஆம் ஆண்டு  டிசம்பர் 31  ஆம் திகதி காலை 10.16  மணிக்கு ஹொனலுலுவில் தரையிறங்கியுள்ளது.