உள்­ளூராட்­சி­மன்ற தேர்­த­லுக்­கான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் கன்னி பிர­சார கூட்டம் இன்று செவ்­வாய்­க்கி­ழமை பிற்­பகல் 3 மணிக்கு சுக­த­தாச உள்­ளக அரங்கில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதன் போது கூட்டு எதிர்க்கட்­சியின் தேசிய தலைவர் என்ற வகையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தேசிய கொள்கை திட்­டத்தை வெளியிட்டு வைக்க உள்ளார். 

Image result for மஹிந்த தலை­மையில் கூட்­டம்­

தங்­கா­லையில் அமைந்­துள்ள கால்டர்ன் இல்­லத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை கூட்டு எதிர்க்­கட் ­சியின் சிரேஷ்ட உறுப்­ப­ினர்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமல் ராஜ­பக் ஷ மற்றும் பஷில் ராஜ­பக் ஷ உள்­ளிட்­ட­வர்கள் இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர். 

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் அனைத்து வேட்­பா­ளர்­களும் இன்று அழைக்­கப்­பட்டு சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொள்­ளவும் , கட்­சியின் தேசிய கொள்கை திட்­டத்தை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அறி­விக்­க­வு­மான தீர்­மானம் இந்த சந்­திப்பின் போது எடுக்­கப்­பட்­டது.

இது குறித்து ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறு­கையில் ,

தேசிய அர­சாங்­கத்தை ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து முன்­னெ­டுக்­கையில் அதனை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் எதிர்த்­தனர். இதனால் தான்  சுயா­தீ­ன­மா­கவும் தனித்தும் செயற்­பட கட்­சியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனு­மதி வழங்­கினார்.

தொடர்ந்தும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் ஒட்­டிக்­கொண்டு தேசிய அர­சாங்­கத்தில் இருக்கும் போது தேர்­தல்­களில் எவ்­வாறு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு ஆத­ர­வ­ளிக்க முடியும். இதனால் கூட்டு எதிர்க்­கட்சி தனித்து ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் மொட்டு சின்­னத்தில் போட்­டி­யி­டு­கின்­றது. இதனை தவறு என கூறு­வ­தற்கு சுதந்­திர கட்­சிக்கு தார்­மீக உரிமை கிடை­யாது. 

எனவே தான் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­கின்றோம். இதன் போது  ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­விற்கு என்று தனித்­து­வ­மான தேசிய கொள்கை திட்டம் உள்­ளது. அதனை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இன்று வெளியிட்டு வைப்பார். நல்­லாட்சி அர­சா­ ங்­கத்­திற்கு எதி­ரான பிர­சா­ர­ம­ாகவே இது காணப்­படும்.

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலை பொறுத்த வரையில் வெற்றி இலக்­கு­களை அடை­வது உறு­தி­யாகும். கூட்டு எதிர்க் கட்­சியில் செயற்­படும் சுதந்­திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை  எடுக்கப்பட்டால் அதனை

எதிர்கொள்வதற்கு  தயாராகவே உள்ளோம். தாமரை

மொட்டு சின்னத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக  பிரசார நடவ டிக்கைகளில் ஈடுபடுவோம்.