அரச அலு­வ­லர்­க­ளுக்கு பொது நிர்­வாகச் சுற்­ற­றிக்கை 03–2016 மூல­மாக நான்கு கட்­டங்­க­ளாகப் பிரித்து வழங்­கப்­பட்டு வரும் சம்­ப­ளத்தின் மூன்றாம் கட்ட அதி­க­ரிப்­பினை 2018 ஜன­வரி முதலாம் திகதி அமு­லாகும் வகையில் ஜன­வரி மாத சம்­ப­ளத்­துடன் அரச அலு­வ­லர்கள் பெற்­றுக்­கொள்­ள­வுள்­ளனர்.

2016 தொடக்கம் 2019 வரை நான்கு கட்­டங்­க­ளாகப் பிரித்து வழங்­கப்­பட்டு வரும் இச்­ சம்­ப­ளத்தின் முழு­மை­யான அதி­க­ரிப்பு 2020 ஜன­வரி தொடக்கம் அரச அலு­வ­லர்­க­ளுக்கு கிடைக்­க­வுள்­ளது.

இவ்­வாறு அதி­க­ரிக்­கப்­படும் சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் மேலும் பல நன்­மை­களை அரச அலு­வ­லர்கள் பெற்று வரு­கின்­றனர். குறிப்­பாக மேல­திக நேரப்படி, இடர் கடன், சொத்துக் கடன் போன்­ற­வற்­றுடன் ஓய்வில் செல்­லும் ­போது வழங்­கப்­படும் ஓய்­வூ­தியப் பணிக்­கொடை ஓய்­வூதியம் போன்­ற­வற்­றிலும் அவர்கள் அதிகரித்த தொகையினைப் பெறக்கூடிய வகையில் இந்த சம்பள அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.