புது வருடம் உத­ய­மான நொடி முதல் திடீர் விபத்­துக்கள் 6 சதவீதத்தால் அதி­க­ரிப்பு.!

Published By: Robert

02 Jan, 2018 | 11:42 AM
image

 புத்­தாண்டு காலப்­ப­கு­தியில் பதி­வான திடீர் விபத்­துக்கள் கடந்த ஆண்­டுடன் ஒப்­பிடும் போது சிறு அதி­க­ரிப்பை காட்­டு­வ­தாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் திடீர் விபத்து பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் வைத்­தியர் சமந்தி சம­ரகோன் தெரி­வித்தார். 

2018 ஆம் ஆண்டு புது வருடம் உத­ய­மான நொடி முதல் நேற்று பகல் வரை பல்­வேறு அனர்த்­தங்கள் தொடர்பில் 512 பேர் இம்­முறை கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் அவர்­களில் 194 பேர் தொடர்ந்து வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெறு­வ­தா­கவும்  அவர் மேலும் தெரி­வித்தார்.

வீதி விபத்­துக்கள் கார­ண­மாக 117 பேரும் வீடு­களில் இடம்­பெற்ற விபத்­துக்கள் மற்றும் அனர்த்­தங்­களால் 68 பேரும் தவறி, வழுக்கி விழுந்­த­மையால் 161 பேரும்  வன்­மு­றைகள் கார­ண­மாக 42 பேரும், பட்­டாசு கொளுத்தும் போது   ஏற்­பட்ட காயங்கள் கார­ண­மாக 12 பேரும் தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­களில் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டையே இவ்­வ­ருடம் புத்­தாண்டு தின விபத்­துக்­களில் தீக்­கா­யங்கள் தொடர்­பி­லான சம்­ப­வங்கள் குறை­வ­டைந்­துள்­ள­தாக தேசிய வைத்­தி­ய­சா­லையின் திடீர் விபத்து பிரிவு பயிற்சி வழங்கும் தாதி அதி­கா­ரி­யான  புஷ்பா ரம்­யானி டி சொய்ஸா தெரி­வித்தார். 

எவ்­வா­றா­யினும் தீக்காய சம்­ப­வங்கள் குறை­வ­டைந்த போதும் ஏனைய சம்­ப­வங்கள் தொடர்பில் குறிப்­பி­டத்­தக்க சிறிய அதி­கரிப்பொன்­றினை அவ­தா­னிக்க முடி­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

2017 ஆம் ஆண்டு பிறக்கும் போது ஏற்­பட்ட திடீர் விபத்­துக்கள்  கார­ண­மாக 479 பேர் தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக சுட்­டிக்­காட்­டிய அவர் இம்­முறை 512 பேர் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அது 6 வீத அதி­க­ரிப்பு எனவும் தெரி­வித்தார்.

 ஊட­கங்கள் ஊடாக பல தட­வைகள் தெளி­வு­ப­டுத்­த­ப்படும் போதும், இம்­முறை திடீர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயும் போது தனிப்பட்ட காரணங்கள் காரணமாக அந்த  நிலைமைக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளமை உறுதி யாவதாக குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04