கொழும்பு, பம்பலப்பிட்டி – டுப்ளிகேசன் வீதியில் அமைந்துள்ள நான்கு மாடி வர்த்தகக் கட்டிடத்தில் தீபரவியுள்ளது.

இத் தீ அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி பொலிஸார், மின்சார சபையினர், கொழும்பு நகர சபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் இணைந்து குறித்த தீயை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தினால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தீ அனர்த்தம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.