பாதுக்கை கல­கெ­தர மஸ்ஜித் ஸுஹைலி பள்­ளி­வாசல் மீது நேற்று அதி­காலை இனம் தெரி­யா­த­வர்கள் சிலர் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.நேற்று அதி­காலை 3 மணி­ய­ள­விலே இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக பள்­ளி­வா­சலின் தலைவர் மொஹமட் இஸ்­மாயீல் தெரி­வித்தார்.

சம்­பவம் தொடர்பில் அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஹங்­வெல்ல  பாதுக்கை வீதியில் அமைந்­துள்ள இந்த பள்­ளி­வாசல் மிகவும் பழை­மை­வாய்ந்­த­தாகும். சம்­பவ தினம் நள்­ளி­ரவு புத்­தாண்டு பிறப்பு கார­ண­மாக பட்­டாசு சத்தம் பர­வ­லாக ஒலித்­துக்­கொண்­டி­ருந்­தது. அத்­துடன் வீதியில் ஆள் நட­மாட்­டமும் அதி­க­ரித்­தி­ருந்­தது. வழ­மைப்­போன்று அன்­றைய தினமும் இரவு 10 மணி­ய­ளவில் பள்­ளி­வாசல் பிர­தான கதவு அடைக்­கப்­பட்­டுள்­ளது.

புத்­தாண்டு பிறப்பு பட்­டாசு சத்தம் கார­ண­மாக பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் இருக்கும் வீட்­டார்கள் நள்­ளி­ரவு வேளை­யிலும் கண்­வி­ழித்தே இருந்­துள்­ளனர்.  புத்­தாண்டு பிறந்­ததன் பின்னர் மக்கள் நித்­தி­ரைக்கு சென்­றதன் பிறகு சுமார் 3மணி­ய­ள­விலே  பள்­ளி­வாசல் மீது   தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் பிர­தான வீதியில் இருந்தே பள்­ளி­வாசல் மீது கல்­லெ­றி­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் பள்­ளி­வா­சலின் பிர­தான கதவு கண்­ணா­டி­யினால் அமைக்­கப்­பட்­டி­ருப்­பதால் கண்­ணா­டியை நோக்­கியே கல் எறி­யப்­பட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இதனால் கண்­ணாடி முற்­றாக சேத­ம­டைந்­தி­ருந்­தது. அத்­துடன் அன்­றை­ய­தினம் பள்­ளி­வா­சலில் யாரும் இருக்­கா­த­ப­டியால் கல் எறி­யப்­பட்­ட­போது உடனே அது­தொ­டர்­பாக அறி­விப்­ப­தற்கு முடி­யாமல் போயுள்­ளது. அதி­காலை சுபஹ் தொழு­கைக்கு வந்த வேளையே பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் இடம்­பெற்­றி­ருப்­பது தெரிய வந்­தது. 

உடனே பாதுக்கை பொலி­ஸுக்கு சம்­பவம் தொடர்­பாக அறி­வித்­ததும் பொலிஸார் சம்­பவ இடத்­துக்கு வந்து நிலை­மை­களை அவதானித்து சென்றனர். பின்னர் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் பொலிஸார் மோப்ப நாய்களுடன் வந்து சோதனைகளை மேற்கொண்டனர். தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.