வவு­னி­யா ­பு­திய பேருந்து நிலை­யத்­திற்கு செல்­லு­மாறு தம்மை கட்­டா­ய­ப­டுத்­தினால் இன்று முதல் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­டப்­போ­வ­தாக இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் இணைந்த தொழிற்­சங்கம் தெரி­வித்­துள்­ளது.

இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­சந்­திப்பில் தொழிற்­சங்­கத்தின் தலைவர் வாம­தேவன் கருத்து தெரி­விக்­கும்­போது இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரி­வித்த அவர்,

பேருந்து நிலையம் தொடர்­பா­க ­வ­ழக்­கொன்று நீதி­மன்­றத்தில் உள்­ளது. இந் நிலையில் வட மாகாண முத­ல­மைச்­ச­ரினால் நேற்­றைய தினம் புதிய பேருந்து நிலையம் தொடர்­பாக கூட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­த­துடன் இன்று முதலாம் திக­தியில் இருந்து புதிய பேருந்து நிலை­யத்­திற்கு எம்­மையும் செல்­லு­மாறு தெரி­வித்­த­துடன் பழைய பேருந்து நிலை­யத்­தினை மூடு­மாறு தெரிவித்­துள்ளார்.

இதன்­போது, எமக்­கான சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை. எனி­னும் வேறு பலர் இவ்­வி­ட­யத்தில் சம்­பந்­தப்­ப­டா­த­வர்கள் இதில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். 1800 மேற்­பட்ட தொழி­லா­ளர்­களை கொண்ட எமது சங்­கத்­தினை வெளி­யே­று­மாறு தெரி­வித்து முத­ல­மைச்சர் கூட்­டத்தை நட­த்­தி­ய­தனால் எம்மை அவ­ம­தித்து விட்டார்.

இந் நிலையில் நீதி­மன்­றத்தில் வழக்கு இருக்கும் போது ஓர் நீதி­ய­ர­ச­ராக இருந்­தவர் நீதி­மன்­றத்­தையே அவ­ம­திக்கும் வகையில் செயற்­பட்­டுள்ளார்.

இந் நிலையில் நாம் கடந்த 53 வரு­டங்­க­ளாக செயற்­பட்டு வரும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து எம்மை வெளி­யேற கோரு­வது நியா­ய­மற்­றது. நாம் 2018 ஆம் ஆண்­டுக்­கான நிதியை நக­ர­ச­பைக்கு செலுத்­தி­யுள்ளோம்.

எனினும் அப்­ப­ணத்தை மீண்டும் எமக்கு செலுத்­தி­விட்டு எம்மை வெளி­யேற்­று­மாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் புதிய பேருந்து நிலை­யத்­திற்கு செல்­லு­மாறு தெரி­விக்­கின்­றனர்.

எனவே, எமது சேவைகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செயற்படுத்துமாறு தெரிவித்தால் எமது தொழிலாளர்களின் நலன்கருதி இன்று முதல்  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.