பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை எரிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருட்களை எரித்தல் மற்றும் வாகனங்களில்இருந்து வெளியேறும் புகை போன்றவற்றால்  வளி மாசடைவு ஏற்படுவதோடு அவற்றால் புற்றுநோய், பக்கவாதம், நீல நிறம் கொண்ட சிசு பிறப்பு உள்ளிட்ட பல சுவாச நோய்கள் உண்டாகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் மேற்படி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

அதற்கிணங்க வீட்டுத் தோட்டத்தில் கூட இத்தகைய பொருட்களை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம்  சிறைத்தண்டனை அல்லது 10 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படுமென மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.