மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் விரைவில் தீர்­மானம் எடுக்­கப்­படும். தேர்­த­லுக்கு முன்னர் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­படும் என ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தெரி­விக்­கின்­றது. மக்­களின் நிதியை கொள்­ளை­ய­டித்த நபர்­க­ளுக்கு நாட்டில் எந்த அங்­கீ­கா­ரமும் வழங்­கப்­ப­டக் கூடாது, அத்­துடன் குற்­ற­வா­ளி­க­ளுக்கு கடி­ன­மான தண்­ட­னை­யினை வழங்­க­வேண்டும் என ஜனா­தி­ப­திக்கு வலி­யு­றுத்­து­வ­தா­கவும் அக்­கட்சி தெரி­வித்­தது. 

சர்ச்­சைக்­கு­ரிய மத்­தி­ய­வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் ஜனா­தி­ப­தியின் மூல­மாக நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணை ஆணைக்­குழு தனது அறிக்­கையை நேற்று முன்­தினம் ஜனா­தி­ப­தி­யிடம்  கைய­ளித்­துள்ள நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அடுத்­த­கட்­ட­மாக முன்­னெ­டுக்­க­வுள்ள நகர்­வுகள் குறித்து சகல தரப்­பு­களும் கேள்வி எழுப்பி வரு­கின்­றது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கட்­சி­யான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிலைப்­பாடு எவ்­வா­றா­னது என வின­விய போதே கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன இதனை குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், 

மத்­தி­ய­ வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை  வழங்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்தே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி செயற்­பட்டு வரு­கின்­றது. இதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் செயற்­பா­டு­களே விசா­ர­ணை­களை வெற்­றிக்­கான சாத­க­மாக அமைந்­தது. மத்­தி­ய ­வங்கி பிணை­முறி விட­யத்தில் கோப் குழுவின் அறிக்கை மூடி மறைக்­கப்­பட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தனித் தீர்­மா­னத்தின் பிர­கா­ரமே விசா­ரணை ஆணைக்­குழு அமைக்­கப்­பட்­டது. ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் மூல­மா­கவே மத்­தி­ய­ வங்கி பிணை­ முறி ஊழல் விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­கள் பலப்­ப­டுத்­தப்­பட்­டன. சந்­தே­கப்­படும் சகல நபர்­களும் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டனர். இந்த விசா­ரணை ஆணைக்­குழு எந்­த­வித அர­சியல் தலை­யீ­டுகள் இல்­லாது, எவ­ரதும் அதி­கா­ரத்­திற்கு கட்­டுப்­ப­டாது, ஊழல், அச்­சு­றுத்தல் என்ற எதற்கும் அடி­ப­ணி­யாது சுயா­தீ­ன­மாக தனது அறிக்­கை­யினை ஒப்­ப­டைத்­துள்­ளது. ஆகவே இவ்­வாறு ஒரு ஆணைக்­குழு இலங்­கையில் செயற்­பட்ட வர­லாற்றின் முதல் சந்­தர்ப்பம் இது­வாகும். ஆகவே இதுவே ஜனா­தி­ப­தியின் முடிவு என்­ன­வென்ற  நல்­ல­தொரு எடுத்­து­க்காட்­டாக அமைந்­துள்­ளது. ஊழல் குற்­ற­வா­திகள் யாராக இருந்­தாலும் அவர்­க­ளுக்கு மன்­னிப்பு இல்லை என்­பதை அவ­ரது செயற்­பா­டுகள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. 

மேலும் மத்­திய வங்கி ஊழல் விவ­கா­ரத்தில் மூடி­ ம­றைக்க எத­னையும் செய்ய முடி­யாது. இந்த விவ­கராம் ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் இருந்தே ஊட­கங்கள் மூல­மாக சகல தர­வு­களும் மக்­க­ளுக்கு சென்­ற­டைந்­துள்­ளது. ஆகவே மக்கள் மிகவும் தெளி­வாக இந்த சம்­ப­வங்­களை அவ­தா­னித்து வரு­கின்­றனர். அவ்­வாறு இருக்­கையில் குற்­ற­வா­ளி­களை யாரும் எதற்­கா­கவும் காப்­பாற்ற முடி­யாது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­தி­ய­குழு கூட்­டங்­கள் இடம்­பெற்ற சகல சந்­தர்ப்­பங்­க­ளிலும் மத்­தி­ய ­வங்கி விவா­க­ரத்தில் உறு­தி­யான நிலைப்­பாட்டில் இருந்தே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­பட்டு வந்­துள்ளார். குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க வேண்டும் என்ற உறு­தி­யான கொள்­கையில் அவர் உள்ளார். அவ்வாறு இருக்கையில் குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்த லுக்கு முன்னர் இந்த விவகாரம் முடி வுக்கு வரவேண்டும் என நாங்களும் தெரிவித்து வருகின்றோம். சட்டத்தின் மூலமாக முன்னெடுக்கக் கூடிய சகல முயற்சிகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாம் முன்னெடுப்போம். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை உண்டென்பது உறுதி எனவும் அவர் குறிப்பிட்டார்.