குடித்து விட்டு வந்து தொந்தரவு செய்தவரின் நடவடிக்கை பொறுக்க முடியாமல், சக ஊழியர் ஒருவர் அவரைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பனாமுர, தம்பரயாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வாழைத் தோட்டம் ஒன்றில் பணியாற்றிவந்த இருவரும் தோட்டத்துக்குக் காவலாக அங்கேயே தங்கியிருந்தனர்.

அவர்களில் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து சக ஊழியருக்குத் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் முடியாத நிலையில், மதுவுக்கு அடிமையான அவரை வாழை இலை வெட்டும் கத்தியால் வெட்டிக் கொலை செய்திருக்கிறார் சக ஊழியர்.

தனது குற்றத்தை பொலிஸாரிடம் ஒப்புக்கொண்ட அவர் மீதான வழக்கு எதிர்வரும் ஒன்பதாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.