ஹட்டன் தும்புறுகிரிய வீதிகளில் உள்ள வீடுகள் மீது, நள்ளிரவு நேரத்தில் விஷமிகள் சிலர் கல்லெறிந்து வருவதாக பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள சில வீடுகளில் கடந்த சில நாட்களாகவே இவ்வாறான விஷமத்தனங்கள் அரங்கேறிவருவதாக அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் பன்னிரண்டு மணியளவில், ஐந்து பேர் கொண்ட கும்பல் வீதி வழியாகச் செல்லும்போது, கும்பலைச் சேர்ந்த ஒருவர் படலை ஒன்றின் மீது பாரிய கல் ஒன்றைத் தூக்கி எறிவது அந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளன.

இது குறித்து வீட்டு உரிமையாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

நள்ளிரவு நேரங்களில் குழுவாக நடமாடுவது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.