கொழும்பில் இருந்து தலவாக்கலை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று கினிகத்தேன, ரம்பதெனிய பகுதியில் பாறையுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

வருடத்தின் கடைசி நாளான இன்று அதிகாலை 5 மணியளவில், பூஜைக்கான பொருட்களை ஏற்றிச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில், வாகனத்தில் பயணித்த ஐவரில் ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வேனைச் செலுத்திச் சென்றுகொண்டிருந்தபோது சாரதி நித்திரை கொண்டதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.