சிதைக்கப்பட்ட, பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்கான கால எல்லையை மத்திய வங்கி நீட்டித்துள்ளது.

பழுதடைந்த அல்லது பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக இன்று வரை, அதாவது டிசம்பர் 31ஆம் திகதி வரை மத்திய வங்கி கால அவகாசம் வழங்கியிருந்தது.

எனினும் அந்தக் கால எல்லையை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை நீட்டித்திருப்பதாக மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இனியும் அந்தக் கால எல்லை நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரியவரும் நிலையில், அவ்வாறான நாணயத் தாள்களைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.