இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று (30) மீன்பிடிக்க வந்ததாகக் கூறப்படும் இராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.

குறித்த பதின்மூவரும் கச்சதீவுக்குத் தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு சென்ற கடற்படையினர், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தது மட்டுமன்றி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் அவர்களைக் கைது செய்ததுடன், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணைகள் முடிவடைந்ததும் மேற்படி மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.