மருதானை ரயில்வே தலைமையகத்தில் இன்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பாதுகாப்பு அதிகாரி தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோக துப்பாக்கியை பயன்படுத்தியே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்டவர் 54 வயதுடைய பாதுகாப்பு அதிகாரி எனவும் குறித்த தற்கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.