சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஒன்பது பேரை பொலிஸார் கைது செய்தனர்.

கெபித்திகொல்லாவையில் சந்தேக நபர்கள் சிலர் புதையல் தோண்டுவதாக, வவுனியா விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு படையினர் விரைந்தனர்.

அங்கே ஒன்பது சந்தேக நபர்கள் நிலத்தைக் கொத்தித் தோண்டிக்கொண்டிருந்ததைக் கண்ட படையினர், அவர்களைச் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்கள் அனுராதபுரம், பதவிய, மாத்தளை மற்றும் பூனேவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் கெபித்திகொல்லாவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.