அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலிருந்து சுமார் 20 மைல் தூரத்தில் அமைந்துள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட சட்ட அலுவலகத்திலேயே நேற்று  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி அலுவகத்தில் பணியாற்றிவந்த ஒருவர் திடீரெனத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். இதன்போது துப்பாக்கிதாரி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிதாரி தன்னைத்தானே சுட்டுக்கொன்றுள்ளாரா? அல்லது பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளாரா? என்பது பற்றிய தகவல் தெளிவாகத் தெரியவில்லையென அந் நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.