பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ நேற்று மாலை நுவரெலியா சீதாஎலிய கோவிலுக்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில்  கலந்து கொண்டார். 

இதன்போது கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பிரதமரிடம் நினைவுச் சின்னம் ஒன்றையும் கையளித்துள்ளார். 

இந்த பூஜை வழிபாடுகளில் பிரதமர், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.