10 நாட்­க­ளாக படுக்­கையில் இருக்கும் நான் எவ்­வாறு அரச தரப்­புடன் பேச முடியும்?

Published By: Priyatharshan

30 Dec, 2017 | 09:47 AM
image

நான்  கடந்த 10 தினங்­க­ளாக சுக­வீ­ன­முற்று படுக்­கையில் கிடக்­கின்றேன். இந்­நி­லையில்  எவ்­வாறு நான்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து அர­சாங்­கத்­துடன் இணை­வது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த முடியும் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல  கேள்வி எழுப்­பினார். 

 

மூழ்­கிக்­கொண்­டி­ருக்கும் கப்­பலில் யாரும் ஏற­மாட்­டார்கள். அதே­போன்று மக்­களின் செல்­வாக்கை இழந்­து­கொண்­டி­ருக்கும்  இந்த அர­சாங்­கத்­துடன் நான் இணைந்­து­கொள்­ள­மாட்டேன் என்றும் கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல சுட்­டிக்­காட்­டினார். 

கூட்டு எதி­ர­ணியை   பிர­தி­நி­தித்­துவம் செய்யும்   கண்­டி­மா­வட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர­சாங்­கத்தில் இணைந்து  ஊட­கத்­துறை  இரா­ஜாங்க அமைச்சுப் பத­வியை பெற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தாக  வெளி­வரும் தக­வல்கள் குறித்து வின­வி­ய­போதே  அவர்  இந்த விட­யங்­களை கூறினார்.  

இது­தொ­டர்பில் கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல கேச­ரிக்கு மேலும்  கருத்து வெளி­யி­டு­கையில்;

நான் அர­சாங்­கத்தில் இணைந்து அமைச்சுப் பத­வியை பெற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்டு வரு­கின்­றன. ஆனால் அவ்­வாறு நான் இணைந்­து­கொள்ள போவ­தில்லை.  மேலும் நான் ஜனா­தி­ப­தியை சந்­திக்­க­வி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

நான் கடந்த 10 நாட்­க­ளாக சுக­வீ­ன­முற்று  படுத்த படுக்­கையில் இருக்­கின்றேன். இன்­றுதான் ( நேற்று) சற்று குண­ம­டைந்து தேர்தல் பணி­களில் ஈடு­பட ஆரம்­பித்­தி­ருக்­கின்றேன். இந்­நி­லையில் கடந்த 10 நாட்­க­ளாக  படுக்­கையில்  இருந்த நான் அரச  தரப்­புடன் இணை­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த முடியும்.  அது­மட்­டு­மன்றி எந்­த­வொரு மனி­தனும் மூழ்­கிக்­கொண்­டி­ருக்­கின்ற கப்­பலில் ஏறப்­போ­வ­தில்லை. 

அதே­போன்று  மூழ்­கி­கக்­கொண்­டி­ருக்­கின்ற கப்­பல்­போன்று   காட்­சி­ய­ளிக்­கின்ற அர­சாங்­கத்தில்  இணைந்­து­கொள்ளும்  எண்ணம் எனக்­கில்லை இதனை நான் மிகவும் உறு­தி­யாக தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். அர­சாங்கம் நாளுக்கு நாள் மக்­களின் செல்­வாக்கை இழந்து வரு­கின்­றது. 

கடந்த தேர்தல் காலத்தில் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள்   நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசாங்கம் தொடர்பில் மக்கள் பாரிய அதிருப்தியுடன்  உள்ளனர். அந்த விடயத்தை வைத்தே நாங்கள் தேர்தலில்  ஈடுபடுகின்றோம். எனவே அவ்வாறன நிலையில் நான் அரசாங்கத்தில்  இணைந்துகொள்வேனா என்று  கேள்வி எழுப்பினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21