கூட்­ட­மைப்பை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு விரைவில் உரிய பதிலை வழங்­குவோம்

Published By: Priyatharshan

30 Dec, 2017 | 09:39 AM
image

வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட  கூட்­ட­மைப்­பினை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு  உரிய பதில் வழங்­குவோம் எனத்தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர்  மாவை சேனா­தி­ராஜா, ஊரைப்பற்றித் தெரி­யா­த­வர்கள்  ஐ.நா. விட­யங்­களைப் பற்றி பேசு­கின்­றார்கள். நீங்­களும் அவ்­வாறு செயற்­ப­டக்­ கூ­டாது என்றும்  வலி­யு­றுத்­தினார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உள்­ளூ­ராட்சி மன்ற வேட்­பா­ளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் நேற்று நல்லூர் இளங்­க­லைஞர் மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் பிரச்­சி­னைகள், சர்ச்­சைகள், கருத்து மோதல்கள் இருந்­தாலும் கூட்­ட­மைப்­புக்குள் உள்ள கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் ஒற்­றுமை உள்­ளது. ஒற்­று­மை­யா­கவே செயற்­பட்டு வரு­கின்றோம். இன்றும் உங்கள் முன்னால் வந்­துள்ளோம். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் புனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போரா­ளி­களை இணைத்­துள்ளோம். எமது இனத்­திற்­காக, மண்­ணிற்­காக, விடு­த­லைக்­காக சைனைட் குப்பி கட்­டி­ய­வர்கள் இன்று எம்­முடன் இணைந்­துள்­ளார்கள். அவர்­களை ஜன­நா­யகப் பாதையில் கொண்டு செல்­ல­வேண்டும். அதற்­காக அவர்­களை நாம் இணைத்­துள்ளோம். 

வடக்கு கிழக்கில் பல இடங்­க­ளிலும் வேட்­பா­ளர்­க­ளாக அவர்­களை நிய­மித்­துள்ளோம். 

2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தில் முன்னாள் போரா­ளி­க­ளுக்­காக மற்றும் பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்­க­ளுக்­காக பல திட்­டங்­களை உள்­ள­டக்­கி­யுள்ளோம். இவை எமது முயற்­சி­யே­யாகும். புனர்­வாழ்வு பெற்ற போரா­ளி­க­ளுக்­காக அங்­க­வீ­ன­ம­டைந்­த­வர்­க­ளுக்­காக பல திட்­டங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கு கிழக்கில் 21 திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. 

50 ஆயிரம் வீட்­டுத்­திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. பொருத்து வீடுகள் தொடர்பில் பல சர்ச்­சைகள் உரு­வாக்­கப்­பட்ட நிலையில் அவை தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

ஊட­கங்­களில் பல உண்­மைக்கு மாறான செய்­திகள் எங்­க­ளுக்கு எதி­ராக வந்து கொண்­டி­ருக்­கின்­றன. இது தொடர்பில் அனை­வரும் அறிந்­தி­ருப்­பீர்கள். வட­மா­காண முத­ல­மைச்சர் கூட தானே கேள்வி எழுதி தானே பதி­ல­ளிக்­கின்ற விட­யத்தில் நாங்கள் மிகவும் கவ­லை­ய­டைந்­துள்ளோம். அதற்­கான பதிலை திட்­ட­வட்­ட­மாக விரைவில் அறி­விப்போம். 

எமது கட்­சியின் செய­லாளர் அதற்குப் பதில் வழங்­குவார் அதன் பின்னர் நாங்கள் பதில் வழங்­குவோம். நாங்கள் இதற்­காக அஞ்­ச­வு­மில்லை. மறைந்­தி­ருக்­க­வு­மில்லை. வர­லாற்றில் அவ்­வா­றான தவ­று­களை நாங்கள் இழைக்­க­வில்லை. எமது இலக்­கு­களை நோக்கிச் சென்று கொண்­டி­ருக்­கின்றோம். 

எங்­களைப் பற்றி விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு முத­ல­மைச்­சரோ வேறு யாராக இருந்­தாலோ மக்­க­ளுக்கு முன்னால் தெளி­வான பதிலை வழங்­குவோம். மக்­க­ளுக்கு முன்னால். உண்­மையைப் பேசுவோம். தெளி­வா­கவும் இரா­ஜ­தந்­தி­ர­மா­கவும் எடுத்துச் சொல்வோம். ஒற்­று­மை­யாக எமது இலக்­கு­களை நோக்கிச் செல்வோம். 

தனித் தனிக் கட்­சி­க­ளாகச் சேர்ந்து வாக்­கு­களைக் கேட்­ப­தற்குப் பதி­லாக ஒன்­று­பட்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பான ஒரே சின்­னத்­திற்கு வாக்­க­ளிக்கக் கோருவோம். ஊர் விட­யங்­களைத் தெரி­யா­த­வர்கள் ஐ.நா. விட­யங்­களைப் பற்றி பேசு­கின்­றார்கள். அவ்­வா­றா­ன­வற்றை நீங்­களும் செய்­யா­தீர்கள். கிரா­மங்கள் வட்­டா­ரங்­களின் அபி­வி­ருத்­தியை பேச­வேண்டும். உள்­ளூ­ராட்­சியில் அதுவே முக்­கி­ய­மான விட­ய­மாகும்.  

கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அதிக சபை­களைக் கைப்­பற்­றி­ய­போதும் பல விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. வடக்கு மாகாண சபை­யிலும் நீதி­ய­ரசர், சட்­டத்­த­ர­ணிகள், வைத்­தி­யர்கள் கல்­வி­மான்கள் என இருந்­த­போதும் விமர்­ச­னங்கள் எழுந்த வண்­ணமே இருந்­துள்­ளன. இலங்­கையில் வட­மா­காண சபையைப் போல் வேறு எந்­த­வொரு சபையும் கல்­வி­மான்­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை. அப்­பி­ரச்­சினை பற்றி பின்னர் பார்ப்போம். இவ்­வா­றான விமர்­ச­னங்கள் இனிவரும் சபைகளில் இடம்பெறக்கூடாது. 

இனிவரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் அதிகளவில் பகிரப்படவுள்ளன. ஆகவே முறையான நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த திட்டங்களை வகுக்கவேண்டும். சபைகள் திறம்படச் செயற்படுவதற்கு நாங்கள் பயிற்சிகளை வழங்குவோம். 

மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு செயலாற்றுபவர்களாக நீங்கள் அனைவரும் மாறவேண்டும். அதற்கேற்ப திட்டங்களை வகுத்து மக்கள் முன்செல்லவேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27