எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில்  ஐவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கெய்ரோவின் தெற்கு பகுதியில் ஹெல்வான் நகரில் அமைந்துள்ள மார்மியா தேவாயத்தில் இன்று  இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தேவாலயத்தினுள்  நுழைய முற்பட்ட ஆயுததாரியை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது ஆயுததாரி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகின்றது.

இதன்போது இரண்டு இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு உத்தியோத்தர்களின் துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை  என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.