பாடசாலை மாணவர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் அரசாங்கத்தினால் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுவதை முற்றாக நிராகரிப்பதாக கல்வி அமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.இலங்கசிங்க தெரிவித்தார்.

இலவசமாக வழங்கப்படும் பாடப்புத்தகங்களை விற்பனை செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானதாகும். இது திட்டமிடப்பட்டு பரப்படும் வதந்தி.

குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல்வேறு குழுக்களை தூண்டுவதன் மூலம் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அரச அச்சு திணைக்களத்தில் நிலவும் வேலைப்பழு காரணமாவே சில புத்தங்களை அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 

எனினும் எதிர்வரும் காலங்களில் மாணவர்களுக்கு கிடைக்கப்பெறாத புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

இவ்வருடம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுவதற்காக அரசாங்கத்தால் 3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான பாடப்புத்தங்கள் விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படும் செய்திகள் தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.