ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இலங்கையின் தேயிலை மீது ரஷ்யா விதித்தத் தடையின் பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து குறித்த தடை நீக்கப்பட்டது.  இதன் காரணமாக மீண்டும் தேயிலை ஏற்றுமதியை ஆரம்பிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்யா விதித்த தடை இரு வார காலம் மாத்திரம் என்பதால் குறித்த தடையின் மூலம் பெரியளவிலான தாக்கம் எதுவும் ஏற்படவில்லை.

இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தேயிலை இன்னமும் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன எனவே அவற்றையும் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.