புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரயில்வே திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசேட ரயில் சேவை இடம் பெறவுள்ளதாக ரயில்வே கட்டுபாட்டு சபை தெரிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பொது மக்கள் மீண்டும் கொழும்புக்கு வரும்போது மக்களின் நலன் கருதி ஜனவரி  7 ஆம் திகதி வரை குறித்த விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இதற்கு மேலதிகமாக பதுளை, பண்டாரவளை பிரதேசங்களுக்கு செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளின் நலன் கருதி இந்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையும் சொந்த இடங்களுக்கு சென்றுள்ளவர்கள் வீடு திரும்புவதற்கு மேலதிக பஸ் சேவைகளை ஈடுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.