"திருமண நிகழ்வின் போது கிடைத்த இடைவெளிகளிலும் பயிற்சியை மேற்கொண்டேன்" என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

எதிர் வரும் ஜனவரி மாதம் முதல் தென் ஆபிரிக்கா உடனான கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி கலந்துகொள்ள உள்ளது.

"தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சொந்த மண்ணில் வீழ்த்த முடியாத அணியாக செயல்பட்ட இந்திய அணிக்கு இந்தத் தொடர் மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும்" என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தத் தொடர் குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,

"3 வார இடைவெளிக்குப் பின் அணிக்கு திரும்பியிருக்கிறேன். இந்த இடைவெளி எனது ஆட்டத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. திருமண நிகழ்வின் இடைவெளிகளிலும் அவ்வப்போது பயிற்சிகள் மேற்கொண்டேன். கிரிக்கெட் என்பது என் ரத்தத்தில் ஊறியது. நீண்டகாலமாக கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே அயல்நாட்டு மண்ணில் வெற்றியைச் சுவைக்க முடியும். தென் ஆபிரிக்க தொடர் நாம் எதிர்பார்த்ததை விடவும் சவால் நிறைந்ததாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.