யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் மாணவன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் குறித்த மாணவர் வணிக பாடத்தில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவன் தனது சக மாணவர்களை விடவும் அதிக பெறுபேறுகளை பெறமுடியாததன் காரணத்தால் இவ்வாறு நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.